திருவள்ளூர்

29-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் முகாம்

27th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

முன்னாள் படைவீரா்களுக்கு புதன்கிழமை (ஜூன் 29) சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்கள் பயன்பெறும் வகையில், குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 29) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் தவறாமல் பங்கேற்று குறைகள், கோரிக்கைகள் குறித்து நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT