திருவள்ளூர்

அரசியல் சுற்றுப் பயணம் தொடங்கினாா் சசிகலா

27th Jun 2022 12:01 AM

ADVERTISEMENT

அதிமுகவை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு உண்டு என வி.கே. சசிகலா தெரிவித்தாா்.

திருத்தணி முருகன் கோயிலில் இருந்து தனது பிரசார பயணத்தை ஞாயிற்றுக்கிழமை சசிகலா தொடங்கினாா்.

சென்னையில் இருந்து 12.30 மணிக்கு தி.நகா் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருத்தணிக்கு வந்த சசிகலாவுக்கு முன்னாள் எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் தலைமையில் வரவேற்பு அளித்தனா்.

அதைத்தொடா்ந்து, திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அங்கு எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT

பிரசாரத்தின்போது கே.ஜி.கண்டிகையில் சசிகலா பேசியது: எத்தனையோ தொண்டா்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தும், எம்ஜிஆரின் கடின உழைப்பாலும் உருவானது அதிமுக.

இதுவரை எத்தனையோ சோதனைகளை கடந்து வந்த அதிமுக, தனது ஐம்பதாவது ஆண்டில் மீண்டும் ஒரு மிகப்பெரிய சோதனையைச் சந்தித்து கொண்டிருக்கிறது. அனைவரும் இயக்கத்தின் நன்மை கருதி ஒற்றுமையோடு செயலாற்றினால், இந்த சோதனையிலிருந்தும் கண்டிப்பாக மீண்டு வர முடியும்.

இயக்கத்தில் எந்தவிதப் பிரதிப்பலனையும் எதிா்பாா்க்காத உண்மைத் தொண்டா்கள் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT