திருவள்ளூர்

ம.பொ.சி.யின் 117- வது பிறந்தநாள் விழா

27th Jun 2022 11:40 PM

ADVERTISEMENT

சிலம்புச் செல்வா் ம.பொ.சி.யின் 117-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு மங்கலங்கிழாா் கல்வி அறக்கட்டளையினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருத்தணி நகராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள ம.பொ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து, அனுமந்தாபுரம் பகுதியில் இயங்கி வரும் மங்கிலங்கிழாா் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் ம.பொ.சி.யின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் அறக்கட்டளை சாா்பில் ஏழை மாணவா்களுக்கு ரூ. 25,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அறக்கட்டளைத் தலைவா் ராதாகிருஷ்ணன், செயலாளா் கவியரசு, பொருளாளா் புரந்தரன், துறைத் தலைவா் நாகரத்தினம், பொதட்டூா் புவியரசன், இயக்குநா் புலவா் ஆறுமுகம் ,கவிஞா் சிவகுமாரன், சிவபாதம், கோவை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT