திருவள்ளூர்

திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

27th Jun 2022 11:38 PM

ADVERTISEMENT

திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக ஹசத்பேகம் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் சங்கரன் கோயில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து, தற்போது திருத்தணிக்கு பணியிட மாற்றம் பெற்று வந்துள்ளாா். அவருக்கு, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கதிா்வேலு, வட்டாட்சியா்கள் வெண்ணிலா, மணிவாசகம், தமயந்தி, சரவணன், துணை வட்டாட்சியா்கள் முரளி, ரீட்டா, தமிழ்செல்வி, சாமுண்டீஸ்வரி, வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸை சந்தித்து, கோட்டாட்சியா் ஹசத் பேகம் வாழ்த்துப் பெற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT