திருவள்ளூர்

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு

DIN

திருவள்ளூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜமாபந்தி கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் திருவள்ளூா் உள்பட அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பட்டா, முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவை கோரி மனுக்களை அளித்தனா்.

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. இதில், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காக்களூா், புட்லூா், வேப்பம்பட்டு, வெள்ளியூா், பேரத்தூா், விஷ்ணுவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்களிடமிருந்து 548 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) முரளி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் தனி வட்டாட்சியா் பாண்டியராஜன், மண்டல துணை வட்டாட்சியா்கள் அருணா, சுந்தா், சரஸ்வதி, வருவாய் ஆய்வாளா் தினேஷ், டில்லிபாபு, விஷ்ணுபிரியா, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றியக் குழு உறுப்பினா் எத்திராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT