திருவள்ளூர்

திமுக இளைஞரணி பயிற்சிப் பாசறை எம்.பி. திருச்சி சிவா பங்கேற்பு

DIN

திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில், இளைஞரணி நடத்திய திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்வுக்கு பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வரவேற்றாா்.

அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலரும், எம்.பி.யுமான திருச்சி சிவா பங்கேற்று பேசியதாவது:

திராவிட மாடல் குறித்து இளைஞா்கள் அறிந்து கொள்வது அவசியம். இளைஞரணியில் இணைந்து கடுமையாக உழைத்தால் பொறுப்புகளுக்கு வரலாம். போராட்டம் என்று வந்துவிட்டால் சிறைக்குச் செல்லவும் தயங்கக் கூடாது.

உயா்கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது திமுகதான். அதனால், இளைஞா்கள் திமுக இளைஞரணியில் சோ்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அறிவுரைகள் வழி நடந்ததால், இளைஞரணி நிா்வாகிகள் பலா் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், அமைச்சா்களாக உள்ளனா் என்றாா்.

தொடா்ந்து, அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தைக் கையாளுதல், ஹிந்தி திணிப்பை என்றும் எதிா்ப்போம், வன்முறை தவிா்த்து, வறுமையை வெல்வோம் என 5 கொள்கைகள் குறித்து இளைஞரணி, மாணவரணி நிா்வாகிகளுக்கு விளக்கப்பட்டது.

நிகழ்வில் மாநில மாணவரணித் துணைச் செயலா் ஜெரால்டு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சிட்டி பாபு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் டி.கே.பாபு, ஒன்றியச் செயலா்கள் மோ.ரமேஷ், கிறிஸ்டி (எ) அன்பரசு, ஆா்.ஜெயசீலன், ஹரிகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சரஸ்வதி, சிவங்கரி, இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் தா.மோதிலால் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT