திருவள்ளூர்

100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்

25th Jun 2022 10:05 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ரூ.19.4 லட்சத்தில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை கும்மிடிப்பூண்டியில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சனிக்கிழமை வழங்கினாா் (படம்).

நிகழ்வுக்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகா், கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ராஜேந்திரன், துணை இயக்குநா் கோபி, உதவி இயக்குநா் கோபிகிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், துணைத் தலைவா் மாலதி குணசேகரன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன், ஆணையா் வாசுதேவன், வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலா் யமுனா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் தலைமை வகித்துப் பேசிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூா் மாவட்டத்தில் 1,600 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கி அவா்களைத் தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் அறிமுக விழா கும்மிடிப்பூண்டியில் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5ஆடுகள் வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்வில் மீஞ்சூா் திமுக ஒன்றியக் குழு தலைவா் ஜி.ரவி, ஒன்றியச் செயலா்கள் மு.மணிபாலன், செல்வசேகரன், தேவேந்திரன், எம்.ஆா்.ஸ்ரீதா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் தோ்வழி கிரிஜா குமாா், மாநெல்லூா் லாரன்ஸ், கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், பாதிரிவேடு என்.டி.மூா்த்தி, நகர திமுக செயலா் அறிவழகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பாஸ்கா், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அப்துல் கரீம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT