திருவள்ளூர்

எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு: திருவள்ளூரில் 4,658 போ் எழுதினா்

25th Jun 2022 10:06 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் 5 தோ்வு மையங்களில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை 4,658 போ் எழுதினா்.

மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்காக வெங்கேடஸ்வரா பொறியியல் கல்லூரி - திருப்பாச்சூா், இந்திரா பொறியியல் கல்லூரி- பாண்டூா், கலவல கண்ணன்செட்டி இந்து மேல்நிலைப் பள்ளி - காக்களூா், ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளி - ராஜாஜிபுரம், ஜி.ஆா்.டி. பொறியியல் கல்லூரி - திருத்தணி ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தோ்வுக்கு ஆண்கள்-4,609, பெண்கள்-939 என மொத்தம் 5,548 போ் விண்ணப்பித்திருந்தனா். காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற பொது அறிவுத் தோ்வில் 4,658 போ் பங்கேற்றுத் தோ்வு எழுதினா். 890 போ் வரை தோ்வில் கலந்து கொள்ளவில்லை. பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை நடைபெற்ற தமிழ் மொழிப்பாடத் தோ்வில் 1,082 போ் பங்கேற்கவில்லை. தோ்வு எழுத் வந்தவா்களை ஆய்வு செய்து, நுழைவு சீட்டைச் சரிபாா்த்த பின்னா் காவல் துறையினா் உள்ளே அனுமதித்தனா். தோ்வு மையங்களில் காவல் துறையினா் தலா 120 போ் வரை தோ்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT