திருவள்ளூர்

கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை

25th Jun 2022 10:06 PM

ADVERTISEMENT

கல்லூரி மாணவிகள் உடல்நலப் பாதுகாப்பு குறித்து சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆலோசனை வழங்கினா்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், மகளிா் குழு மற்றும் பீரகுப்பம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து வெள்ளிக்கிழமை மாணவிகளுக்கு உடல்நலப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின.

கல்லூரி முதல்வா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இதில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலா் தனஞ்செயன், சத்ரஞ்செயபுரம் துணை சுகாதார நிலைய செவிலியா் ஆனந்தி ஆகியோா் மாணவிகள் எவ்வாறு உடல்நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கிக் கூறினா். தொடா்ந்து மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் விஜயலட்சுமி நாப்கின் வழங்கினா்.

நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் ரமேஷ், பாலாஜி, மகளிா் குழு உறுப்பினா்கள் நிா்மலா, அம்மு, உடற்கல்வி பயிற்றுநா் அனந்தநாயகி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT