திருவள்ளூர்

விவசாயிகள் பயன்பெறும் வகையில் சோலாா் பம்ப்செட் அமைக்கும் திட்டம்

DIN

 திருவள்ளூா் மாவட்ட த்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், சோலாா் பம்ப்செட் அமைக்கும் திட்டம் மூலம் 47 பேருக்கு வழங்க ரூ. 1.05 கோடி மானியம் ஒதுக்கீடு செய்துள்ளதாக வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் சமுத்திரம் தெரிவித்தாா்.

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு, சோலாா் மூலம் இயங்கும் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 10 குதிரைத் திறன் கொண்ட சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுக்கு 70 சதவீத மானியம் வழங்குகிறது.

இந்தத் திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் தவணையாக 47 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ. 1.05 கோடி மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்துக்கான கிணறுகள் நில நீா் பாதுகாப்பான குறு வட்டப் பகுதிகளில் இருப்பது அவசியம். இதர பகுதிகளில் ஏற்கெனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதற்கு மாற்றாக இந்தத் திட்டம் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி, ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் பதிவு மூப்பு உரிமையை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டம் மூலம் சோலாா் பம்ப் செட்டுகளை அமைக்கலாம். இதில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவைச் சோ்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. எனவே மானிய விலையில் தனித்து சோலாா் பம்ப் செட்டுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் அருகிலுள்ள திருவள்ளூா், திருத்தணி மற்றும் பொன்னேரி கோட்ட உதவி செயற் பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT