திருவள்ளூர்

அதிகாரிகள் நிர்ணயித்த அளவை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி

21st Jun 2022 12:49 PM

ADVERTISEMENT

செம்பரம்பாக்கம்: முதல் கட்டமாக 250 கன அடி நீரினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பொதுப்பணித் துறை தீவிர கண்காணிப்பு  இருக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிருஷ்ணா நதி நீர் வரத்தாலும், இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் உயரம் 23.48 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3509 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 550 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 108 கன அடியாகவும் உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும். தற்போது 23.48 அடி இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நதி நீரையும் நேற்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் நிறுத்தினர். ஏரியின் நீர்மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், அதிகாரிகள் நிர்ணயித்த அளவை ஏரி நெருங்குவதால் இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். 

இதையும் படிக்க: தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?

ADVERTISEMENT

இன்றும் மழை இருக்கும் என்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். எனவே இரவு நேரத்தில் உபரி நீர் திறந்து விடப்படுவது சாத்தியம் இல்லாத காரணத்தால் இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சற்று உபரி நீரை திறந்து விடலாமா என்பது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வந்த நிலையில், இன்று இரவும் மழை பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டும், வரும் பருவமழை காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் திறந்து விடப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

இதனடிப்படையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 250 கன அடி நீர் உபரி நீர் திறக்கபட்டு, பொதுப்பணித் துறை தீவிர கண்காணிப்பில் இருக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT