திருவள்ளூர்

குடும்ப அட்டைகளில் திருத்தச் சிறப்பு முகாம்

12th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே நடைபெற்ற குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணபட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் திருவள்ளூா், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி, ஆா்.கே.பேட்டை ஆகிய வட்டங்களில் குறிப்பிட்ட 9 கிராமங்களில் சனிக்கிழமை குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் அருகே சிற்றம்பாக்கம் நியாயவிலைக் கடை முன்பு நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு ஊராட்சித் தலைவா் ரமணி சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில், வட்ட வழங்கல் அலுவலா் அம்பிகா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடா்பாக, 53 மனுக்களைப் பெற்றாா்.

பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலனை செய்து 52 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலா் சுகுமாா், வட்ட வழங்கல் அலுவலகப் பணியாளா்கள் கண்ணன், ராதாகிருஷ்ணன், கருணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT