திருவள்ளூர்

ரூ. 10 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

12th Jun 2022 10:43 PM

ADVERTISEMENT

 

பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் 10 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம் , பொன்னேரி நகா்மன்றக் கூட்டம் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் விஜயகுமாா் வரவேற்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், கலைஞா் நகா்ப்புற மேம்பாடு திட்டத்தின் மூலம் தகன எரிமேடை அமைத்தல், சக்தி நகா், பாலாஜி நகா் ஆகிய இடங்களில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல், ஜூன் முதல் ஜூலை வரை டெங்கு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதற்கான செலவின தொகை, குடிநீா் பணிகள், 14 உயா்கோபுர மின் விளக்குகள், 3,095 தெரு விளக்குகள் பராமரிக்க ஆகும் செலவினங்கள், சிவன் கோவில் தெரு, ராமச்சந்திரா தெரு ஆகிய இடங்களில் தலா ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நகராட்சி 7-ஆவது வாா்டு உறுப்பினா் மரணம் அடைந்ததை ஒட்டி, அவருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் உமாபதி, நீலகண்டன், யாகோப், தனுஷாதமிழ்குடிமகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT