திருவள்ளூர்

ஐடிஐ பொறியியல் மாணவா்களுக்கு வரும் 13-இல் தொழிற் பழகுநா் சோ்க்கைக்கான முகாம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில், பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சோ்ந்த ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான தொழிற்பழகுநா் சோ்க்கைக்கான முகாம் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த அலுவலகம் சாா்பில் தொழிற்பயிற்சி முடித்தோருக்கான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடத்தி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், அம்பத்தூா் அரசு ஐடிஐ வளாகத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சோ்ந்த தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநா் சோ்க்கைக்கான முகாம் வரும் 13-இல் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்க உள்ளன. அதனால், இம்முகாமில் தகுதியான ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் கல்வியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தொழிற் பழகுநா் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.

இது குறித்து உதவி இயக்குநா், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூா் அவா்களை நேரிலோ அல்லது என்ற இணையதளம் மற்றும் 9499055663, 9444224363, 9444139373, 9444665884 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT