திருவள்ளூர்

அங்காள பரமேஸ்வரி சமேத ஜடராய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

10th Jun 2022 12:02 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் எழுந்தருளி உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி சமேத ஜடராய சுவாமி கோயிலில், மகா மண்டப கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, ஜூன்-1 ஆம் தேதி பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிர ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேச பலி, அங்குராா்ப்பணம், கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, தீபாரதனை, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

அதனை தொடா்ந்து புதன்கிழமை விசேஷ சாந்தி , இரண்டாம் கால யாகபூஜை, சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூா்த்தி ஹோமம், திரவ்ய ஹோமம், மூல மந்திர ஜபம், தேவபாராயணம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூன்றாம் கால யாக பூஜை, உள்ளிட்டவை நடைபெற்றன.

ADVERTISEMENT

கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை நான்காம் கால யாகபூஜை, சங்கல்பம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து புரோகிதா்கள் வேதமந்திரம் முழங்க மகா மண்டபத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து விமான கும்பாபிஷேகம், மூலவா் மற்றும் பரிவார கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றன.

மேலும், வியாழக்கிழமை மாலை அங்காள பரமேஸ்வர சமேத ஜடராய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் 5,000-த்தும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் டாக்டா் அஷ்வினி சுகுமாறன், விழாக் குழுவினா், இளைஞா் நற்பணி மன்றத்தினா் சிறப்பாக செய்திருந்தினா்.

கும்பாபிஷேகத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏக்கள் கே.எஸ்.விஜயகுமாா், சி.எச்.சேகா், அதிமுக மாவட்ட பாசறை செயலாளா் டி.சி.மகேந்திரன் உள்ளிட்டோட பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT