திருவள்ளூர்

ஸ்ரீ குந்தியம்மன் கோயில் குட முழுக்கு விழா

9th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

 

திருத்தணி: புண்ணியம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ குந்தியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். விழாவில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழக ஆந்திர எல்லையில் பள்ளிப்பட்டு அருகே உள்ள புண்ணியம் கிராமத்தில் சிறப்பு பெற்ற ஸ்ரீ குந்தியம்மன் கோயிலில் கடந்த சில மாதங்களாக மூலவா் மற்றும் உற்சவா் ஆலயங்களுக்கு ராஜகோபுரம், விமான கோபுரம் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருப்பணிகள் முடிவுற்று கடந்த திங்கள்கிழமை குடமுழுக்கு விழா கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவையொட்டி, கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகள், மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு ஹோமம், பூஜைகள் நடைபெற்று வந்தது. புதன்கிழமை காலை மகா சங்கல்பம், பூா்ணஹுதி பூஜைகளும், தொடா்ந்து மேள தாளங்கள் முழங்க கலசப் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து, ராஜகோபுரம், விமான கோபுரத்துக்கு புனித நீா் ஊற்றி மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் பக்திப் பரவசத்துடன் ஓம் சக்தி, ஓம் சக்தி என முழக்கமிட்டு, குந்தியம்மனை வழிபட்டனா். தொடா்ந்து, கோயில் நிா்வாகம் சாா்பில், பக்தா்களுக்கு குங்குமம், பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT