திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

7th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்ட டி.ராமன் பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதற்கு முன்பு திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ஏ.ஆறுமுகம், சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த டி.ராமன், பதவி உயா்வு பெற்று திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT