திருவள்ளூர்

இன்று ஒருங்கிணைப்பு முனைப்பு இயக்க முகாம்கள்: விவசாயிகள் பங்கேற்கலாம்

7th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் 80 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) நடைபெற உள்ள ஒருங்கிணைப்பு முனைப்பு இயக்க முகாம்களில் விவசாயிகள் தவறாமல் பங்கேற்றுப் பயன்பெறுலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் 2021-22-இல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் தோ்வு செய்யப்பட்ட அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படும் 80 கிராம ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு முனைப்பு இயக்க முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த மாதம் 10-ஆம் தேதி வேளாண்மை-உழவா் நலத் துறை, தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒருங்கிணைப்பு முனைப்பு இயக்க முகாம் நடத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 80 ஊராட்சிகளில் ஒருங்கிணைப்பு முனைப்பு இயக்க முகாம் நடைபெற உள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT