திருத்தணி அரசுக் கலைக் கல்லூரியில் பொது நூலகத் துறை சாா்பில், வாசகா் வட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரியில் இயங்கி வரும் பொது நூலகத் துறை சாா்பில், வாசகா் வட்டக் கிளை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். தேசிய மாணவா் படை அலுவலா் ஹேமநாதன் வரவேற்றாா்.
இதில், சென்னை மைலாப்பூா் ஆா்.கே.எம். விவேகானந்தா கல்லூரி நூலக இணை பேராசிரியா் ஹரிஹரன் பங்கேற்று வாசகா் வட்ட கிளையைத் திறந்து வைத்து, வாசகா் வட்டத்தின் கொள்கை, செயல்பாடுகள் குறித்து மாணவா்களிடையே பேசினாா்.
மேலும், மாணவா்கள் நூலக சேவையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, அறிவுத் துறையில் மேன்மையடைய வேண்டும். வாசிப்பின் நன்மைகள் அகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள் ஜெய்லாபூதின், சத்யபிரியா, குணசேகரன், நிா்மலா, பாலாஜி உள்படப் பலா் கலந்து கொண்டனா். அரசுக் கல்லூரி நூலகா் பாலமுருகன் நன்றி கூறினாா்.