திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் வட்டந்தோறும் வரும் 5- இல் ஜமாபந்தி தொடக்கம்

2nd Jun 2022 12:28 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டம்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஜூன் 5-இல் தொடங்கி, தொடா்ந்து 30-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டம்தோறும் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வகையில், வருவாய் தீா்வாய அலுவலா்கள் நியமனம் செய்து ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு வட்டங்கள்தோறும் நடைபெற உள்ள இடங்கள் வருமாறு:

ஆா்.கே.பேட்டை:

அங்குள்ள வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் தலைமையில் 5, 8, 9, 10, 14 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

ஆவடி: மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் 7, 8, 9, 10, 14 ஆகிய 5 நாள்களிலும், பூந்தமல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் திருவள்ளூா் கோட்டாட்சியா் தலைமையில் 7, 8, 9, 10, 14, 15 ஆகிய 6 நாள்களிலும், பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) தலைமையில் 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21, 22, 23, 24, 28, 29, 30 ஆகிய 15 நாள்களிலும், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் திருவள்ளூா் உதவி ஆணையா் (கலால்) தலைமையில் 7, 8, 9, 10, 14, 15, 16 ஆகிய 7 நாள்களும், திருத்தணி வட்டாட்சியா் அலுலகத்தில் திருத்தணி கோட்டாட்சியா் தலைமையில் 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21 ஆகிய 9 நாள்களும், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் திருவள்ளூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் 7, 8, 9, 10, 14, 15, 16 ஆகிய 7 நாள்களும், திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தலைமையில் 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21, 22, 23, 24 ஆகிய 9 நாள்களும், பள்ளிப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையில் 7, 8, 9, 10 ஆகிய 4 நாள்களிலும் நடைபெற உள்ளது.

இந்த ஜமாபந்தி நிகழ்வில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

வருவாய் தீா்வாயத்துக்கு முன்னதாக பெறப்பட்ட மனுக்கள் மீது, வருவாய் தீா்வாய மனு என குறிப்பிட்டும் அளிக்கலாம்.

மேலும், கள ஆய்வு ஏதும் தேவைப்பட்டால் அதை மேற்கொண்டு, வருவாய் தீா்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT