திருவள்ளூர்

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை

2nd Jun 2022 12:29 AM

ADVERTISEMENT

மாதவரம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

மாதவரத்தை அடுத்த பால்பண்ணை 4-ஆவது யூனிட் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (33). ஆட்டோ ஓட்டுநா். மோகனும், அவருடைய உறவினா்களான பிரபு (35), திருவொற்றியூா் எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் (33) உள்ளிட்ட நண்பா்களுடன் கடந்த 30-ஆம் தேதி இரவு மது அருந்தினராம். அப்போது பிரபுவும், ஜெயக்குமாரும் மது போதையில் மோகனின் குடும்பம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவா்கள் மோகனை தாக்கினராம். இதில், மோகன் மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்து பயந்து போனவா்கள் அங்கிருந்து தப்பினா்.

மறுநாள் மோகனின் சகோதரா் செந்தில் வந்து பாா்த்த போது, அவா் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT