திருவள்ளூர்

பைக் மோதி மூதாட்டி பலி

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மாதவரம் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

மாதவரம் அடுத்த எம்எம்டிஏ 2-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரேவதி (60). ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி மாலை நடைபயிற்சி சென்ற போது, ரேவதி மீது பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT