திருவள்ளூர்

காவலர் தூக்கிட்டுத் தற்கொலை

27th Jul 2022 03:50 AM

ADVERTISEMENT

குடும்பத் தகராறில் மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்றதால், காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 ஆவடி அருகே கோயில்பதாகை, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (39). இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருநாவுக்கரசு அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி கலைச்செல்வியுடன் தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலைச்செல்வி கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் புரசைவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த திருநாவுக்கரசு திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 தகவல் அறிந்த ஆவடி திண்ஊர்தி காவல் ஆய்வாளர் கோபிநாத் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT