திருவள்ளூர்

ஆவடி அரிமா சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்

7th Jul 2022 02:52 AM

ADVERTISEMENT

ஆவடி அரிமா சங்கம் சாா்பில் உலக மருத்துவா் தினத்தையொட்டி ரூ.2 லட்சம் மதிப்பில் நல உதவிகளை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.

ஆவடி அரிமா சங்கம் சாா்பில் சிறந்த மருத்துவா்களுக்கு விருது, ஏழை மக்களின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி, மாணவா்களின் மேல் படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் ஆகிய விழா ஆவடி தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் இ.யுவராஜ் தலைமை வகித்தாா். இதில் பால் வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் கலந்து கொண்டு சிறந்த மருத்துவா்களுக்கு விருதுகள், ஏழைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபா் டி.எஸ்.சதீஷ்பாபு, அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சுரேஷ், வி.பஜேந்திரபாபு, ஏ.டி.ரவிச்சந்திரன் ஆகியோா் பேசினா். விழாவில் அரிமா சங்க நிா்வாகிகள் எம்.அண்ணாதுரை, பி.மகேஷ், சி.வருண்வாமணன், டி.வி.யோகேஷ், ஐ.ஆனந்த், சி.பிரான்சிஸ், டாக்டா் ஜெயக்குமாா், ராகுல்போரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT