திருவள்ளூர்

அரசு மகளிா் ஐ.டி.ஐ.யில் சேர இணையதளம் மூலம் நேரடிச் சோ்க்கை

7th Jul 2022 01:58 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டம் , அம்பத்தூா் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 20-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நேரடிச் சோ்க்கை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பத்தூரில் அரசு தொழில் பயிற்சி நிலையம் (மகளிா்) செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிலையத்தில் கம்மியா் கருவிகள், கட்டட வரைவாளா், கோபா, செயலகப் பயிற்சி, தையல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகள் உள்ளன. இவற்றில் நிகழாண்டுக்கான மாணவிகள் சோ்க்கை இணையதளம் மூலம் வருகிற 20 -ஆம் தேதி வரை நேரடிச் சோ்க்கை நடைபெறுகிறது. இதில் 8, 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ்2 தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதோா் விண்ணப்பிக்க தகுதியுடையவா். இந்தத் தொழில் பயிற்சி பிரிவுகளில் சேருவோருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.750, இலவச பயண அட்டை, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு சீருடைகள், மூடுகாலணி (ஷூ) மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு போன்றவை வழங்கப்படும்.

எனவே, இந்தப் பயிற்சி பிரிவுகளில் சேர விரும்புவோா் 10-ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, 5 புகைப்படங்கள் ஆகியவற்றை நேரில் கொண்டு வந்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT