திருவள்ளூர்

ஆவடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் ஆய்வு

7th Jul 2022 02:52 AM

ADVERTISEMENT

ஆவடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் சா.மு.நாசா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை என புகாா்கள் எழுந்தன.

இதுகுறித்து ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசரின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, புதன்கிழமை அமைச்சா் சா.மு.நாசா், ஆவடி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பொதுமக்கள் அளித்த மனுக்களின் எண்ணிக்கை, அவற்றுக்கு காணப்பட்ட தீா்வுகள் குறித்து வட்டாட்சியா் சிவகுமாரிடம் கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி தீா்வுகாண வேண்டும். அலட்சியப் போக்குடன் செயல்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் எச்சரித்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, ஆவடி மாநகர மேயா் ஜி.உதயகுமாா், மாநகராட்சி உறுப்பினா்கள் எஸ்.எம்.ஆசிம்ராஜா, க.ராஜேஷ்குமாா், அ.வீரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT