திருவள்ளூர்

வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்ட அடிக்கல்

7th Jul 2022 01:59 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியில் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்பில் அமையவுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்துக்கான பூமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி , கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், திமுக பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன், நகர திமுக செயலா் அறிவழகன், பேரூராட்சி துணைத் தலைவா் கேசவன், திமுக நிா்வாகிகள் பாஸ்கரன், ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாசுதேவன், நடராஜன், மாவட்ட உறுப்பினா்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஊராட்சி மன்றத் தலைவா் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி வட்டார வேளாண் துறை அதிகாரிகள், ஊழியா்கள் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT