திருவள்ளூர்

சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 12:01 AM

ADVERTISEMENT

மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியுவைச் சோ்ந்த அமைப்பு சாரா மற்றும் பொது தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவா் எ.செளந்தரராசன் தலைமை வகித்தாா். வட்டார நிா்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டச் செயலாளா் கே.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் கே.நித்தியானந்தம் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்கவும், ரூ. 3,000-ஆக உயா்த்தி வழங்கவும் வேண்டும். பணியிடங்களில் மற்றும் எங்கு மரணம் நிகழ்ந்தாலும் நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். மேலும் 17 முறைசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களின் முத்தரப்பு குழுக்களை உடனே அரசு நியமிக்கவும், சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைத்து பணப்பலன்களை உடனடியாக கிடைக்கவும், அனைத்து முறைசாரா தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், கட்டுமானம், ஆட்டோ, சுமை, தையல் மற்றும் உடலுழைப்பு தொழிலாளா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT