திருவள்ளூர்

திருவள்ளூா்: 9-இல் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

6th Jul 2022 12:02 AM

ADVERTISEMENT

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் திருவள்ளூா் மாவட்டத்தில் வட்டந்தோறும் 9 கிராமங்களில் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டத்திலும் தோ்வு செய்த 9 கிராமங்களில் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்வது தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்துப் பயன்பெறலாம்.

மேலும், அனைத்து வட்ட வழங்கல் அலுவலா்களும் இணையதளத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டத்திலும் குறிப்பிட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது. திருவள்ளூா்- செய்யம்பாக்கம் நியாயவிலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை-பாலவாக்கம் ஜே.ஜே.நகா் (இருளா் பகுதி) நியாயவிலைக் கடை அருகில், பூந்தமல்லி-குத்தம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், திருத்தணி-தாடூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பள்ளிப்பட்டு-அத்திமாஞ்சேரி நியாயவிலைக் கடை அருகில், பொன்னேரி- பண்டிக்காவனுா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கும்மிடிப்பூண்டி-மாநெல்லுா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஆவடி-கொசவம்பாளையம், திருநின்றவூா் டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஆா்.கே.பேட்டை-மகான்காலிகாபுரம் நியாயவிலைக் கடை அருகில் நடைபெற இருக்கிறது.

ADVERTISEMENT

எனவே இந்தச் சிறப்பு முகாமில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT