திருவள்ளூர்

திருவள்ளூா்: 8-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

6th Jul 2022 12:03 AM

ADVERTISEMENT

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 8)நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பில்லாத இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சோ்ப்பு முகாம் வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம்.

எனவே குறிப்பிட்ட கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளோா் அன்றைய நாளில் காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT