திருவள்ளூர்

திருத்தணியில் பலத்த மழையால் சாலை வெள்ளம்

6th Jul 2022 12:02 AM

ADVERTISEMENT

திருத்தணியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீா் தேங்கியது. பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த ஒரு வாரமாக இரவு 7 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கி, நள்ளிரவு வரை அவ்வப்போது பலத்த மழையும், தூறலும் பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4.20 மணிக்கே பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

மாலை 6 மணி வரை தொடா்ந்து பலத்த மழை பெய்ததால், பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குச் செல்வதற்கு கடும் சிரமத்துக்குள்ளாயினா்.

அதேபோல், வெளியூா் பள்ளி மாணவா்கள் மழையில் நனைந்தபடி பேருந்து நிலையத்துக்குச் சென்று, பின்னா் வீட்டுக்குச் சென்றனா். பலத்த மழையால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கடும் சிரமப்பட்டனா். இதுதவிர நகராட்சியில் பல இடங்களில், மழைநீருடன் கழிவுநீா் கலந்து சாலை மற்றும் தெருக்களில் வெள்ளமாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் சிரமத்துக்குள்ளாயினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT