திருவள்ளூர்

தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்

DIN

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளதால், விண்ணப்பம் செய்வதற்கு திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வியியல் பட்டதாரிகள் குவிந்தனா்.

பள்ளிக் கல்வித் துறைக் கட்டுப்பாட்டில், ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகளில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 1.6.2022 அன்று நிலவரப்படி, சுமாா் 13,000-க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன.

இந்தக் காலிப் பணியிடங்களால் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் எந்தக் காரணம் கொண்டும் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக நிகழாண்டில் தற்காலிகமாக ஆசிரியா்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்-256, பட்டதாரி ஆசிரியா்-416, தொடக்கப் பள்ளி ஆசிரியா்-133 என காலிப் பணியிடங்கள் உள்ளன.

இந்த தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு திருவள்ளூா், ஆவடி, அம்பத்தூா், பொன்னேரி, திருத்தணி ஆகிய கல்வி மாவட்டங்களில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்தோா் நேரில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து விண்ணப்பம் அளிப்பதற்காக கல்வியியல் பட்டதாரிகள் குவிந்தனா்.

முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன், அங்கு விண்ணப்பம் அளிக்க வந்த கல்வியியல் பட்டதாரிகளிடம் காலிப் பணியிட விவரங்கள் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அதைப் பாா்த்து விண்ணப்பத்தை நிறைவு செய்து அளிக்கும்படி ஆலோசனை வழங்கினாா்.

அப்போது, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாத கல்வியியல் பட்டதாரிகள் விண்ணப்பம் அளித்தனா். இதையடுத்து, ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்று, சான்றிதழ்கள் சரிபாா்த்தோா் மட்டும் விண்ணபிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

நிகழ்வின் போது, நோ்முக உதவியாளா்கள் (மேல்நிலைக் கல்வி) பூபால முருகன், தேவி (உயா்நிலைக் கல்வி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT