திருவள்ளூர்

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சுகாதாரக் கேடு: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

4th Jul 2022 11:30 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அருகே தனியாா் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், சாணாபுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கொண்டமநல்லூா் கிராம மக்கள் சாா்பில், ஜீ.ஆனந்தன், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் அளித்த மனு:

கொண்டமநல்லூா் கிராமத்தில் இறால் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவு நீா் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் கலந்து வருவதால், நீரின் தன்மையும், சுவையும் மாறிவிட்டன.

இதனால், கிராமத்தின் ஆரோக்கியமான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல், கைகளில் சொறி, சிரங்கு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன.

ADVERTISEMENT

அதிகமான அளவில் நிலத்தடி நீரை வீணாக்கி வருவதால், கிராமத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேய்ச்சல் நிலங்களும் பாழாகி வருகின்றன.

எனவே, இறால் தொழிற்சாலையானது அரசு விதிமுறைகளின்படி இயங்குகிா என்பதை தொடா்புடைய துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT