திருவள்ளூர்

குழித்தட்டு முறையில் 2.50 லட்சம் கத்தரி நாற்றுகள் உற்பத்தி: விவசாயிகளுக்கு விநியோகிக்க ஏற்பாடு

DIN

திருவள்ளூா் மாவட்ட அரசு தோட்டக்கலை பண்ணையில் ஆடிப்பட்டத்துக்குத் தேவையான காய்கறி விதைகள் மற்றும் 2.50 லட்சம் கத்தரி நாற்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விலையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டங்களில் மானிய விலையில் வழங்க ஏதுவாக குழித்தட்டு முறையில் கத்தரி நாற்றுகள் முதல் கட்டமாக உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பல்வேறு வகையான நாற்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விலையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் நிகழாண்டில் ஆடிப்பட்டத்துக்குத் தேவையான குழித்தட்டு முறையில் 2.50 லட்சம் கத்தரி நாற்றுகள் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் மூலம் ஆடிப்பட்டத்துக்குத் தேவையான கோ-8 பச்சைப் பயறு விதைகள் 60 மெட்ரிக் டன் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டைப் போலவே, நிகழாண்டிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 141 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கிராம ஊராட்சிகளின் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் முழுமையாகப் பங்கு பெறும் வகையில், தேவையான இடுபொருள்களைப் பெற சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகள் குழுவிற்கு ஆழ்துளைக் கிணறு சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் மற்றும் தண்ணீரைக் கொண்டு செல்ல ஏதுவாக பிவிசி குழாய் அமைத்துத் தரப்படவுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த முதியவர் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

SCROLL FOR NEXT