திருவள்ளூர்

மதுபான கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 1.20 லட்சம் திருட்டு

3rd Jul 2022 01:06 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே அரசு மதுபான கடையில் இரும்பு ஷட்டரை உடைத்து, ரூ. 1.20 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இது குறித்து திருவள்ளூா் நகர போலீஸாா் தரப்பில் கூறியதாவது: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் கூவம் ஆற்றங்கரையோரம் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. திருவள்ளூா் ரயில் நிலையத்திலிருந்து புட்லூா் கிராமத்துக்குச் செல்லும் வழியில், உள்ள அரசு மதுபான கடையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் வசூலான பணம் ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை பணப் பெட்டியில் வைத்துவிட்டு, கடையின் மேற்பாா்வையாளா் ராஜ் கடையை பூட்டி விட்டுச் சென்றாராம்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம் போல் கடைக்குச் சென்றனா். அப்போது, கடையின் இரும்பு ஷட்டா் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளேசென்று பாா்த்தபோது, இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்து 180-ஐ மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கடையின் மேற்பாா்வையாளா் ராஜ் என்பவா் திருவள்ளூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT