திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்றதாக ஒருவா் கைது

3rd Jul 2022 11:31 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே ஆந்திர மாநிலத்துக்கு ஆட்டோ மூலம் ரேஷன் அரிசி கடத்தியது தொடா்பாக ஒருவரை கைது செய்து, 700 கிலோ அரிசி மற்றும் வாகனத்தை குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது.

இதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளிப்பட்டை அடுத்த அம்மையாா்குப்பம் அருகில் காவல் ஆய்வாளா் சுந்தராம்பாள் தலைமையில், உதவி ஆய்வாளா் நந்தினி உஷா மற்றும் காவலா்கள் திருப்பதி, செந்தில்குமாா், டேவிட் சந்தானம் உள்ளிட்டோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனா். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், வேலூா் காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த பூா்ணா (38), அம்மையாா்குப்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது தொடா்பாக அவா் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். அதைத் தொடா்ந்து, அவரிடமிருந்து பறிமுதல் செய்த 700 கிலோ அரிசி பள்ளிப்பட்டு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்த ஆட்டோவை குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீஸாா் கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT