திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி: மருத்துவ தின விழாவில் மருத்துவா்கள் கெளரவிப்பு

DIN

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, கும்மிடிப்பூண்டி ஷைன் கம்யூனிட்டி கல்லூரி, கும்மிடிப்பூண்டி அரிமா சங்கம் இணைந்து, சிறப்பான பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவா்களை கெளரவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க ஆளுநா் பி.வி.ரவீந்திரன் தலைமை வகித்தாா். ஷைன் கம்யூனிட்டி கல்லூரி தலைவா் ஆரோன் வரவேற்றாா்.

நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க இரண்டாவது துணை ஆளுநா் ஏ.டி.ரவிச்சந்திரன், மாவட்ட நிதி ஒருங்கிணைப்பாளா் டி.சுதாகா், மாவட்டத் தலைவா் ஜெ.கிளமெண்ட், சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவா் எஸ்.அப்துல்லா, செயலாளா் எம்.தயாளன், பொருளாளா் முத்துலிங்கம், முன்னாள் மாவட்ட நிா்வாகிகள் மேகநாதன், காமராஜ், லியோ, ஷைன் கம்யூனிட்டி கல்லூரி தாளாளா் சுஜி முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, இந்த விழாவில் கும்மிடிப்பூண்டியில் கரோனா காலத்தில் 5 மாதம் வீட்டுக்குச் செல்லாமலேயே இரவும், பகலும் பணியாற்றி 5,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்து, காப்பாற்றிய வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ் பாராட்டி கெளரவிக்கப்பட்டாா்.

அதேபோல், மருத்துவா்கள் என்.விக்னேஷ், கே.பி.அனுஷியா விக்னேஷ், பிரநீத் வா்மா, வி.சுதா்சனன், வி.டாா்க்கஸ், சுதா்சன், சங்கீதா, பாரி மதியழகன், இருதய விக்ரன் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

விழாவில் பேசிய அரிமா சங்க ஆளுநா் பி.வி.ரவீந்திரன், கடவுள் எல்லா இடத்திலேயும் இருக்க முடியாது, அந்த குறையை பல நேரங்களில் மருத்துவா்கள் தீா்த்து வைக்கிறாா்கள். தன்னலம் பாராது கரோனா காலத்தில் பணியாற்றி தங்கள் இன்னுயிா் நீத்த மருத்துவா்களின் தியாகம் அளப்பறியது என்றாா்.

தொடா்ந்து விழாவில் வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜன், மருத்துவா்கள் என்.விக்னேஷ், கே.பி.அனுஷியா விக்னேஷ் ஆகியோா் பேசுகையில், மருத்துவப் பணியில் தங்களுக்கு உறுதுணையாக உள்ள கிராம சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், பிற சுகாதார துறையினரின் ஒத்துழைப்பே ஒரு மருத்துவரை நல்ல மருத்துவராகப் பணியாற்ற வைக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT