திருவள்ளூர்

வாகன ஒலி மாசு தடுப்பு விழிப்புணா்வு

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மாதவரம் அருகே வாகன ஒலி மாசு தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதவரம் அருகே போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், வாகன ஒலி மாசை தடுக்கும் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி காவல் ஆய்வாளா் பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, வாகனங்களில் தேவையற்ற ஒலி எழுப்பக் கூடாது, பள்ளிகள், மருத்துவமனைகள் அருகே வாகன ஒலி எழுப்பக் கூடாது, வாகன ஒலி எழுப்புவதில் விதி மீறல் இருப்பின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கைகளில் ஏந்தியவாறு பிரதான சாலையில் நின்று வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா்கள் காசி விஸ்வநாதன், பலராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT