திருவள்ளூர்

செங்கல்பட்டு செம்மலை ஸ்ரீ வேல்முருகன் திருவிளக்கு பூஜை!

2nd Jul 2022 11:26 AM

ADVERTISEMENT


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இராமபாளையம் மலைமீதுள்ள செம்மலை ஸ்ரீவேல்முருகன்  திருக்கோவிலில் குமுதம் பக்தி ஸ்பெஷல் மற்றும் ஜிஆர்டி  தங்க மாளிகை கோயில் நிர்வாகம் இணைந்து திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விளக்கு பூஜையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து யாக பூஜை செய்யும் திருவிழா நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும், இயற்கையை பாதுகாக்கவும் வேண்டி நடைபெற்ற கூட்டு பிரார்த்தனை விளக்கு பூஜையில் 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் விளக்கு பூஜைகளில் கலந்து கொண்டு குடும்பம் சுபிட்சமாக, இருக்கவும், நாடு வளமாக இருக்கவும் இயற்கை வளங்கள் பெருகவும் வேண்டி பூஜைகள் நடைபெற்றது. 

ADVERTISEMENT

செம்மலை கோயிலில் நடைபெற்ற விளக்கு பூஜை

கட்டணம் ஏதும் இன்றி நடைபெறும் விளக்கு பூஜையில் கலந்து கொள்ளலாம் என பக்தகோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டத்தை அடுத்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு செம்மலையான் அருளை பெற்றனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு செம்மலையானின் பாதத்தில் வைத்து பூஜீக்கப்பட்ட வாஸ்து இயந்திரம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

இதையும் படிக்க | புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி 9வது வார்டு உறுப்பினராக ஈஸ்வரி பாஸ்கரன் போட்டியின்றி தேர்வு

விளக்கு பூஜையை ரொட்டி அன்னதானம் நடைபெற்றது.

செம்மலை ஸ்ரீ வேல்முருகன் கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர்கள், இளைஞர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT