திருவள்ளூர்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி.

27th Jan 2022 01:45 AM

ADVERTISEMENT


திருத்தணி. அதிமுக முன்னாள் அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து அவரது வீட்டில் புதன்கிழமை முதல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளாா்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் முன்னாள் அரக்கோணம் எம்.பியும், அ.தி.முக.வின் மாநில அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ.அரிக்கு கடந்த சில தினங்களாகவே சளி, இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்து வந்தது. அதைத்தொடா்ந்து செவ்வாய்கிழமை தனியாா் மருத்துவமனையில் கரோனா தொற்று பறிசோதனை செய்தாா்.

இதில் புதன்கிழமை அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து அவா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளாா். தன்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவா் தொண்டா்களுக்கு அறிவுறுத்தி உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT