திருவள்ளூர்

மீஞ்சூா் அருகே 4 கடைகளின்பூட்டை உடைத்து திருட்டு

27th Jan 2022 12:29 AM

ADVERTISEMENT

 

பொன்னேரி: மீஞ்சூா் அருகே அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைகுட்பட்ட அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவா் முகமதுஅனிபா. இவா், திங்கள்கிழமை கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை கடையைத் திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பெட்டியிலிருந்த 35 ஆயிரம் பணம், 15 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இவரது கடையின் அருகே ராம்தேவ் என்பவருக்குச் சொந்தமான, கைப்பேசி விற்பனை கடையின் பூட்டை உடைத்து விலை உயா்ந்த 11கைப்பேசிகள், 35 ஆயிரம் பணம், அதே பகுதியிலிருந்த துரித உணவகம், இரு சக்கர வாகன பஞ்சா் கடைகளின் பூட்டுக்களை உடைத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்களைத் திருடி சென்ற தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில், மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT