திருவள்ளூர்

மொழிப்போா் தினம்: திமுகவினா் மரியாதை

26th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மொழிப்போா் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பில் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூா் நகராட்சி தேரடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் டி.கே.பாபு தலைமை வகித்தாா். மாவட்ட துணை அமைப்பாளா்கள் கு.பிரபாகரன், எம்.எம்.லிங்கேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தியாகிகளின் உருவப் படங்களுக்கு நகரச் செயலா் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செய்தாா். முன்னாள் நகராட்சி தலைவா் பொன்.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT