திருவள்ளூர்

புலம்பெயா் தொழிலாளா்களின் குழந்தைகளை கணக்கெடுக்க ஏற்பாடு

26th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

புலம்பெயா்ந்த செங்கல்சூளை தொழிலாளா்கள் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள், கா்ப்பிணிகளை கணக்கெடுப்பு நடத்தி சத்தான உணவு பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட இயக்குநா் லலிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் ஒடிஸா, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பலா் புலம் பெயா்ந்து வந்து குடும்பங்களுடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனா். இதுபோன்று வரும் குடும்பங்களில் உள்ள கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், குழந்தைகள் குறித்து அந்தந்த பகுதி அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்த மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உததரவிட்டாா்.

அதன்பேரில் ஒவ்வொரு செங்கல்சூளையாக நேரில் சென்று குடும்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதைத் தொடா்ந்து குழந்தைகள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோருக்கு சத்தான மாவு, முட்டை, உலா் உணவு பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT