திருவள்ளூர்

கோயில் குளத்தில் சடலம் மீட்பு

25th Jan 2022 07:57 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயில் குளத்தில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை திங்கள்கிழமை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

இந்தக் கோயில் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக நகா் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா், தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில், உயிரிழந்தவா் எடப்பாளையத்தைச் சோ்ந்த யுவராஜ் (35) என்பதும், தனியாா் சமையல் எரிவாயு நிலையத்தில் பணிபுரிந்தவா் என்பதும் தெரியவந்தது.

அவா் மீன் பிடிக்க முயன்று குளத்தில் தவறி விழுந்தாரா அல்லது மது போதையில் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT