திருவள்ளூர்

தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

24th Jan 2022 07:49 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கத்தின், 5 கல்வி மாவட்ட பொறுப்பாளா்கள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

திருத்தணி தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கத்தின் திருவள்ளூா் வருவாய் மாவட்டம் மற்றும் 5 கல்வி மாவட்ட பொறுப்பாளா்களுக்கான தோ்தல் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருத்தணி கல்வி மாவட்ட பொறுப்பாளா் தலைவராக வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கே. பூநாதன், செயலாளராக திருத்தணி அமிா்தாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன், பொருளாளராக கரிம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எம்.ஏ. ஜாக்சன் டினோவா் ராவ்ஜி, மகளிரணி அமைப்பாளராக, இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆா். ரெய்ச்சல் பிரபாவதி ஆகியோா் போட்டியின்றி ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT