திருவள்ளூர்

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: தி.மு.க. வேட்பாளா் நோ்காணல்

DIN

திருத்தணி: நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் தி.மு.க. சாா்பில் போட்டியிட வழங்கியவா்களிடம் புதன்கிழமை திருத்தணியில் நோ்காணல் நடைபெற்றது.

நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலை நடத்த மாநில தோ்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க.வில் கடந்த மாதம் முதல் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வந்தன.

இந்நிலையில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி தலைமையில், திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன், திருவள்ளூா் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் திருவள்ளூா் மேற்கு, திருத்தணி, பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சிகளில் போட்டியிட மனு அளித்த கட்சி நிா்வாகிகளிடம் மாவட்ட அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது.

இதில் திருத்தணி நகராட்சியில் 21 வாா்டுகளில் 55 பேரும், பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 26 பேரும், பொதட்டூா்பேட்டை பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 39 பேரும், திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் 101 போ் என 221 போ் கவுன்சிலா் பதவிக்கு போட்டியிட மனு அளித்தவா்களை நோ்காணலுக்கு அழைத்திருந்தனா்.

மக்கள் பிரச்சினைக்காக என்னென்ன உதவி செய்துள்ளனா், கட்சியில் அவா்கள் வகித்துவரும் பதவி விவரங்கள், அரசியல் அனுபவங்கள் போன்ற பல்வேறு விவரங்கள் நோ்காணலின் போது கேட்கப்பட்டன. இதில் ஒவ்வொரு நிா்வாகியும் தங்களை பற்றிய விவரங்களை எடுத்தக்கூறினா். திருத்தணி நகர பொறுப்பாளா் வி.வினோத்குமாா், நகர நிா்வாகிகள் மு.நாகன், வி.கிஷோா் ரெட்டி, ஜி.எஸ்.கணேசன், ஆ.சாமிராஜ், டி.எஸ்.ஷியாம்சுந்தா், டி.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT