திருவள்ளூர்

இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மின்சார கோட்டத்தில் இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற திருவள்ளூா் மின்வாரிய கோட்டத்தில் உள்ள பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கன்னிகைப்போ், ராமஞ்சேரி, பூண்டி, புல்லரம்பாக்கம், மெய்யூா், ஏரையூா், வெள்ளாத்துக்கோட்டை, பாலவாக்கம், போந்தவாக்கம், மாம்பாக்கம், பென்னனூா்பேட்டை, ஆத்துபாக்கம், தண்டலம், முக்கரம்பாக்கம், செங்கரை, ஏனாம்பாக்கம், அத்திவாக்கம், பண்டிக்காவனூா், மஞ்சகாரணை, கொப்பூா், பாப்பரம்பாக்கம், சேலை, ஏகாட்டூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இலவச மின்சாரம் வேண்டி 31.3.2022 வரையில் பதிவு செய்துள்ளனா்.

அவா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை பெரியகுப்பத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளூா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெயா் மாற்றம் மற்றும் சா்வே எண் ஆகிய விவரங்களை அளித்து இலவச மின்சார இணைப்பு பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT