திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு இருவா் பலி

18th Jan 2022 01:04 AM

ADVERTISEMENT

 திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 1,018 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்றுப் பாதித்த இருவா் உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ஆம் தேதி 306 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த 17 நாள்களில் படிப்படியாக அதிகரித்து, 12,062 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் சிகிச்சை முடிந்து 954 போ் வீடு திரும்பினா். 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

தொற்றால் பாதிக்கப்பட்டோா் மருத்துவா்களின் ஆலோசனைப்படி அரசு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு பாதுகாப்பு மையங்கள், வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT