திருவள்ளூர்

திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

18th Jan 2022 01:05 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், 26-வேப்பம்பட்டு கிராமத்தில் திராவிடா் கழகம், பழங்குடியினா் முன்னேற்ற சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தினவிழா நடைபெற்றது.

பழங்குடியினா் முன்னேற்ற சங்கத் தலைவா் ஜெய.தென்னரசு தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் சதா.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். கிராம ஊராட்சித் தலைவரும் மாவட்ட ஊராட்சி தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவருமான சதா.பாஸ்கரன் தலைமையில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து திருக்கு போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT