திருவள்ளூா் அருகே கீழ்நல்லாத்தூா், பல்லவன் திருநகரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (37). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். இவா், பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே பிலாப்பூரில் உள்ள பூா்விக வீட்டுக்கு சென்றிருந்தாா். திங்கள்கிழமை பிற்பகல் வீடு திரும்பியபோது, நுழைவாயில் கதவு, வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது மா்மநபா்கள் இருவா் பீரோவை உடைத்து பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனராம். அவா்களை பிடிக்க முயன்ற ராஜேஷின் தாய் கோகிலா, மாமானாா் சீனிவாசனை தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனராம். ரூ.5 லட்சம் ரொக்கம், நகைகள் திருடுபோனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மணவாளநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.